உள்ளூர் செய்திகள்

தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனுக்கு மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து அவரிடம் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை- துணைவேந்தர் பேச்சு

Published On 2022-09-08 10:23 GMT   |   Update On 2022-09-08 10:23 GMT
  • ஒரு சிறந்த பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டு ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
  • யு.ஜி.சி., நெட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் கணினிவழித் தேர்வுகள் நடத்தப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

விழாவில் துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்ப்பல்க லைக்கழகத்தின்இலக்கி யத்துறையில் முதுகலைப் பயின்று வரும் திருநங்கையருக்கு கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டண ங்களை யும் பல்கலைக்கழகமே ஏற்கும்.

அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு புலத்தில் இருந்தும் ஒரு சிறந்த பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டு ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

வருகிற 12ந் தேதி வள்ளலார் பிறந்தநாளையொட்டி, அட்சயபாத்திர நாள் விழா கொண்டாடப்படும்.

இதில், சன்மார்க்க மன்றத்துடன் இணைந்து விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணத்தைக் குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

யு.ஜி.சி., நெட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் கணினிவழித் தேர்வுகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆசிரிய ர்களை பெருமைப்படுத்தும் விதமாக கவிதைகள், கட்டுரைகள், கருத்துரைகள், பாடல்கள் ஆகியவற்றை மாணவர்கள் படைத்தனர்.

விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் தியாகராஜன், கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை, மொழிப்புல முதன்மையர் கவிதா, துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை தலைவர் குறிஞ்சிவேந்தன், முனைவர்கள் சீமான், இளையராஜா, வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள், முதுகலை மாணவர்கள் ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.

Tags:    

Similar News