உள்ளூர் செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது நடவடிக்கை- எஸ்.பி. உத்தரவு

Published On 2023-01-25 08:41 GMT   |   Update On 2023-01-25 08:41 GMT
  • ஒரு உயிர் என்பது தனிப்பட்ட நபரின் உயிர் அல்ல, அது ஒரு குடும்பத்துக்கும் சமுதாயத்–துக்குமான இழப்பு.
  • பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 -ம் ஆண்டில் மட்டும் 2,217 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 537 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தும், 2,327 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஒரு உயிர் என்பது தனிப்பட்ட நபரின் உயிர் அல்ல, அது ஒரு குடும்பத்துக்கும் சமுதாயத்–துக்குமான இழப்பு, இந்த இழப்பினால் அந்த குடும்பத்தின் பாது–காப்புக்கு உத்தரவாதம் இல்லை.

பொருளாதார சிக்கலில் சிக்கி மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த இழப்பை வாகனம் ஓட்டும் போது 'ஹெல்மெட்' அணிவதன் மூலம் தவிர்க்கலாம். உங்களது பாதுகாப்புக்–காகவும், உங்கள் குடும்பத்தின் பாது–காப்புக்காகவும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது 'ஹெல்மெட்' அணிய வேண்டியது அவசியம்.

வாகனம் ஓட்டுபவர் மட்டும் அல்லாது, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணிய வேண்டும். நாளை (வியாழக்கிழமை) முதல் ஏற்கனவே அமலில் உள்ள மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி, தஞ்சை மாவட்டத்தில் 'ஹெல்மெட்' அணி–யாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் 'ஹெல்மெட்' டினை பயன்படுத்தி தங்கள் உயிரையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News