உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே விபத்துகள்: பெண் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி
- அவ்வழியாகவந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கார் அவர்கள் மீது மோதியது.
- கவிதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் பழைய ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 37).இவர் தனதுதாயுடன் இருசக்கர வாகனத்தில் ஓசூர்-பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாகவந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கார் அவர்கள் மீது மோதியது.இதில் கவிதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.அவரது தாய் லோகம்மாள் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல வாணியம்பாடி பகுதியை சேர்ந்த குமார் (38) என்ற வாலிபரும், போச்சம்பள்ளி அருகேயுள்ள குட்டன்கொல்லை கொட்டாய் பகுதியை சேர்ந்த கமலநாதன் (46) என்பவரும் இருசக்கர வாகனங்களில் சென்றபோது வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர்.