உள்ளூர் செய்திகள்
பாகலூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி தொழிலாளி சாவு
- பின்னால் வந்த மினி லாரி ஒன்று மோதியது.
- சம்பவ இடத்திலேயே சேகர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை சேர்ந்தவர் சேகர் (வயது 51).இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பெரியார் நகர் பகுதியில் வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாகலூர் -ஓசூர் .சாலையில் சென்று கொண்டிருந்தார். பாலாஜி நகர் பகுதியில் அவர் சென்றபோது பின்னால் வந்த மினி லாரி ஒன்று மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சேகர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.