உள்ளூர் செய்திகள்

கயத்தாறு அருகே விபத்தில் பலி-லாரி டிரைவர் உள்பட 2 பேர் மீது மோதிய வாகனம் அடையாளம் தெரிந்தது

Published On 2022-12-10 14:39 IST   |   Update On 2022-12-10 14:39:00 IST
  • சண்முகராஜ் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
  • மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் நெல்லை மேலப்பாளைம் நத்தம் பகுதியை சேர்ந்தது என்பது தெரியவந்தது.

கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 36). லாரி டிரைவர்.

இவர் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு நோக்கி வந்து கொண்டிருந்தார். வில்லிச்சேரி நாற்கர சாலையில் வந்தபோது நடந்து சென்ற ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் சண்முகராஜூம், நடந்து சென்றவரும் ரோட்டில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த வாகனம் இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

வாகனம் அடையாளம் தெரிந்தது

நடந்த சென்றவர் அப்பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவரது பெயர் விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி அங்குள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து நிற்காமல் சென்ற வாகனம் குறித்து காட்சிகளை பார்வையிட்டார்.

அப்போது அந்த வாகனம் நெல்லை மேலப்பாளைம் நத்தம் பகுதியை சேர்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் அதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News