உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி பதுக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Published On 2022-07-28 07:48 GMT   |   Update On 2022-07-28 07:48 GMT
  • ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.
  • அப்போது அங்குள்ள ரைஸ் மில்லில் 280 மூட்டைகளில் சுமார் 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் பூலாவரி லட்சுமனூர் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் டி.எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் பூலாவரி லட்சுமனூர் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ரைஸ் மில்லில் 280 மூட்டைகளில் சுமார் 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மில் உரிமையாளர் செந்தில்குமார் (வயது 42)போலீசார் வருவதைக் கண்டு தப்பி ஓடிவிட்டார், இதை யடுத்து அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொ) விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரில் வீட்டில் அருகில் இருந்த செந்தில்குமாரை கைது செய்தனர். 

Tags:    

Similar News