வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.
சுப்பிரமணியபுரத்தில் ஆணழகன் போட்டி
- தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆணழகன் மற்றும் பிட்னஸ் தூத்துக்குடி 2022- க்கான போட்டிகள் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற பாலச்சந்தருக்கு இந்த வருடம் மிஸ்டர் தூத்துக்குடி 2022 ம் ஆண்டுக்கான சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது .
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட தமிழன் அமெச்சூர் பாடி பில்டிங் மற்றும் பிட்னஸ் அசோசியேஷன் மற்றும் எஸ்.வி.பி.எஸ்.பெல் ஸ்போர்ட்ஸ் சென்டர் இணைந்து நடத்திய தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆணழகன் மற்றும் பிட்னஸ் தூத்துக்குடி 2022- க்கான போட்டிகள் நடைபெற்றது.
எஸ்.வி.பி.எஸ். ஜெயசீலி மணியப்பன் குத்துவிளக்கு ஏற்றினார். தூத்துக்குடி தொழிலதிபர் பழரசம் பா.விநாயகமூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 151 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியானது உடல் எடை அடிப்படையில் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ் மற்றும் அதோடு சேர்த்து முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ஆயிரம் ரூபாய் மற்றும் அனைத்து பிரிவிலும் முதல் 10 வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்தப்போட்டியில் வெற்றி பெற்ற பாலச்சந்தருக்கு இந்த வருடம் மிஸ்டர் தூத்துக்குடி 2022 ம் ஆண்டுக்கான சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது . அவருக்கு தங்க கேடயம், தங்க மெடல், ரொக்க பரிசாக ரூ. 10 ஆயிரம் மற்றும் இரண்டாவது பரிசு பெற்ற லோகேஸ்வரனுக்கு தங்க கேடயம், சில்வர் மெடல் மற்றும் ரொக்க பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சுப்பிரமணியபுரம் சேகர தலைவர் டேவிட் ராஜ், உமா கேட்டரிங் நிறுவனத் தலைவர் தொழிலதிபர் ஆனந்தகுமார், தூத்துக்குடி தொழிலதிபர் பால் கமல் ஜெய்சிங், சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, சாயர்புரம் பேரூராட்சியின் 14-வது வார்டு கவுன்சிலர் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், திருப்பணி செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், மற்றும் தேவாசீர்வாதம், சரவணமூர்த்தி, எஸ்.வி.பி.எஸ். சுப ராஜா , ஜோசப் , மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தமிழன் அமெச்சூர் பாடிபில்டிங் பிட்னஸ் அசோஷியேஷன் தலைவர் பால் தங்கம் ராஜேஷ், செயலர் மகாலிங்கம், பொருளாளர் வைரவேல் மற்றும் எஸ்.வி.பி.எஸ். பெல் ஸ்போர்ட் சென்டர் உரிமையாளர்களான எஸ்.வி.பி.எஸ். சுதாகர் மைக்கேல் மற்றும் எஸ்.வி.பி.எஸ். ஆல்வின் பிரேம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.