உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் நேரடியாக இணைக்கும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கூட்டம்

Published On 2022-08-04 15:35 IST   |   Update On 2022-08-04 15:35:00 IST
  • ஆதார் எண்ணை இணையதனம் மூலமாவும், கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்யலாம்.
  • சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலகத்தில் மனுவாக சமர்ப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் நேரடியாக இணைக்கும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமு கர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை நேரடியாக இணைக்கும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்க ளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்கில், வாக்காளர்கள் விரும்பும் பட்சத்தில், தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் நேரடியாக இணைத்து கொள்ளலாம். ஆதார் எண்ணை இணையதனம் மூலமாவும், கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்தும், நேரடியாக இணைத்து கொள்ளலாம்.

மேலும், இப்பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியாளர்கள் வாக்காளர்களின் இல்லங்க ளுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை பெற்று, இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படிவம் அல்லது கருடா கைப்பேசி செயலி மூலமாக இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு அனைத்து வாக்காளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் பதிவு மற்றும் திருத்தங்கள் ஆகியவற்றிற்கு புதிய படிவங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி, புதிய வாக்காளரை சேர்த்திட படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளர்களின் முகவரி மாற்றம், பதிவு திருத்தம், புதிய புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிக்க படிவம் 8 பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே போன்று புதிய இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்திட ஏதுவாக ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. இனி ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் முதல் தேதியினை அடிப்படையாக கொண்டு புதிய வாக்காளர்களை சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதன் அடிப்படையில் 17 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் தங்களது விபரங்களை படிவம் 6ல் பூர்த்தி செய்து வழங்கும் பட்சத்தில், 18 வயது பூர்த்தியாகும் நாளில் அவர்களது பெயர் நேரடியாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படும்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் நான்காம் தேதி முதல் 2023ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தினை தொடங்கவுள்ளது.

இதன்படி, தொலைவிலுள்ள வாக்குச்சாவடிகளை திருத்துதல், பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களை தேர்வு செய்தல் போன்ற பணிகள் நடைபெறவுள்ளது.

மேற்கண்ட பணிகள் தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகளை இருப்பின் வாக்காளர்கள், சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்கு பதிவு அலுவலர் அலுவலகத்தில் மனுவாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த கூட்டத்தில் கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், வருவாய் கோட்டாட்சியர்கள் கிருஷ்ணகிரி சதீஸ்குமார், ஓசூர் தேன்மொழி, தேர்தல் தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களான கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், அதிமுக சார்பில் முன்னாள் எம்பி.,பெருமாள், நகர செயலாளர் கேசவன், தேசியவாத காங்கிரஸ் கட்சி சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News