உள்ளூர் செய்திகள்

தொண்டாமுத்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2023-10-16 14:37 IST   |   Update On 2023-10-16 14:37:00 IST
  • வீட்டை விட்டு வெளியேறி காதலரை திருமணம் செய்து கொண்டவர்
  • திருமணமாகி 4 ஆண்டுகளில் பலியானதால்ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

கோவை,

கோவை தொண்டா முத்தூர் அருகே உள்ள தென்னமநல்லூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சவுந்தர்யா (வயது 27).

இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு வீட்ைட விட்டு வெளியேறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த சவுந்தர்யா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.

சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமார் தனது மனை வியை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு சவுந்தர்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தொண்டாமு த்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4 வருடத்தில் சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்து வருகிறது.

Tags:    

Similar News