யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கம்பிவேலி அமைப்பு
- 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 5 கி.மீ., தூரத்திற்கு கம்பி வேலி அமைக்கப் பட்டுள்ளது.
- மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களையும், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் சுமார் 150 யானைகள் இடம் பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் தஞ்சமடைவது வாடிக்கை யாக உள்ளது.
தளி, ஜவளகிரி காப்புக்காடுகளில் கூட்டம் கூட்டமாக நுழைந்து தேன்கனிகோட்டை, நொகனூர், ஊடேதுர்க்கம், சானமாவு, செட்டிப்பள்ளி மற்றும் மகா ராஜகடை காப்புக்காடுகள் வழியாக ஆந்திரா மாநிலம் கவுண்டன்யா சரணாலயம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சரணாலயம் வரை சென்று, மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் திரும்பி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
அவ்வாறு வரும் யானைகள், ஓசூர் வனக் கோட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. மேலும், மனிதர்கள் மற்றும் கால்நடை உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருட்சேதமும் அதிகரித்து வருகிறது.
பாதிக்கப்படும் விவசா யிகள், பொதுமக்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பொருட்டு, பயிர் சேதங்கள் விவசாய நிலங்களை வனப்பணியாளர்கள் உடனுக்குடன் தணிக்கை செய்து, அதற்கான இழப்பீடுத் தொகை வழங்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சரகம், குள்ளட்டி காப்பு காடு எல்லையில் மேலூர் முதல் ஓம்மாண்டனப்பள்ளி வரை மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மூலம் 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 5 கி.மீ., தூரத்திற்கு கம்பி வேலி அமைக்கப் பட்டுள்ளதையும், மேலூர் வனப்பகுதியில் தொங்கும் வகையிலான மின்வேலி அமைக்க ப்பட்டுள்ளதையும், மேலூர் மத்திய நாற்றங்கால் பண்ணையில் 23 வகையான செடிகள் உற்பத்தி செய்யும் பணிகளையும், அய்யூர்பசுமை சுற்றுலா மாளிகை வளாகத்தில் மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களையும், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். வனப்பகுதியை யொட்டி கம்பிவேலி அமைக்கப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அைடந்துள்ளனர்.