உள்ளூர் செய்திகள்

வீட்டை உடைத்து பெண்ணை தாக்கிய காட்டு யானை

Published On 2022-10-18 10:48 GMT   |   Update On 2022-10-18 10:48 GMT
  • யானை தும்பிக்கையால் தாக்கியது.
  • ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரி த்துள்ளது பொதுமக்க ளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

2 நாட்களுக்கு முன்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யானை தாக்கி பலியானார்கள். இந்தநிலையில் இன்று காலை ஓவேலி நம்பர் 4 பகுதியில் யானை தாக்கியதில் ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

அந்த பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் என்பவரின் மனைவி மகாலட்சுமி (வயது 55). இன்று அதிகாலை இவர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது காட்டு யானை அவரது வீட்டு அருகே வந்தது.

அந்த யானை வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் மகாலட்சுமி அதிர்ச்சியுடன் விழித்தெ ழுந்தார். தப்பி ஓட முயன்ற அவரை யானை தும்பிக்கையால் தாக்கியது. இதில் மகாலட்சுமி பலத்த காயம் அடைந்தார். பின்னர் யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்று மறைந்தது. அக்கம்பக்கத்தினர் மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்று அவரை மீட்டனர். காயம் அடைந்த மகாலட்சுமி ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வனத்துறை ஊழி யர்கள் நேரில் சென்று விசா ரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News