உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் மின் கம்பத்தில் விழுந்த மரம்
- மரம் மின்சார கம்பிகள் மேல் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- மின்சாரத் துறையினர் மின்சார கம்பிகளை சரி செய்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கால நிலை மாற்றம் ஏற்பட்டு காற்றின் வேகம் அதிகமாக வீசி வருகிறது.
இரவில் கோத்தகிரி மிளுதோன் செல்லும் சாலையில் சில்வர் ஊக் மரம் மின்சார கம்பிகள் மேல் சாய்ந்து அப்பகுதியில் வெகு நேரம் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது.
உடனடியாக மின்சார துறையினர் கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து கோத்தகிரி நிலைய அலுவலர் கருப்புசாமி முதன்மை அலுவலர் மாதன் தலைமையிலான குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர்.
பின்பு மின்சாரத் துறையினர் மின்சார கம்புகளை சரி செய்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கினர்.