உள்ளூர் செய்திகள்
கூடலூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மரம் அகற்றம்
- 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- தகவலின்பேரில் கூடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளியில் மழை காரணமாக இரவில் சாலை ஓரம் இருந்த மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது.
இதனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கூடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் கூடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை வெட்டி அகற்றினா். இதையடுத்து போக்குவரத்து சீரானதை அடுத்து வாகனங்கள் வழக்கம்போல் இயங்கியது.