கோப்பு படம்.
கொடைக்கானலில் சுற்றுலா வாகனம் மரத்தில் மோதி விபத்து
- வாகனம் அருகில் இருந்த பள்ளத்தில் விழாமல் தரையில் சக்கரம் பதிந்ததால் தப்பியது
- இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனத்துறை வாகனம் உதவியுடன் கயிறு கட்டி வாகனத்தை சாலைக்கு கொண்டு வந்தனர்
கொடைக்கானல்:
பாண்டிச்சேரியில் இருந்து கொடைக்கானலுக்கு 10க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வேனில் சுற்றுலா வந்துள்ளனர்.வனப்பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் கண்டு ரசித்து விட்டு பசுமை பள்ளத்தாக்கு நோக்கி வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓர மரத்தில் எதிர்பாராத விதமாக மோதி நின்றது.
இதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருப்பினும் வாகனம் அருகில் இருந்த பள்ளத்தில் விழாமல் தரையில் சக்கரம் பதிந்ததால் தப்பியது.இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனத்துறை வாகனம் உதவியுடன் கயிறு கட்டி வாகனத்தை சாலைக்கு கொண்டு வந்தனர்.லேசான காயம்பட்ட இருவரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
அதிக வேகம் மற்றும் பிரேக் செயலிழந்ததால் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது தெரியவந்தது.இதனையடுத்து சேதம் அடைந்த வாகனத்தை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி சுற்றுலா பயணிகளை மாற்று வாகனத்தில் கொடைக்கானலுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.