உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலையா? போலீஸ் விசாரணை

Published On 2022-11-17 12:23 IST   |   Update On 2022-11-17 12:23:00 IST
  • ஆற்றின் மணல் திட்டு நடு பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
  • நெல்லிக்குப்பம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் சொர்ணாவூர் மேல்பாதியில் தடுப்பணைக்கட்டு உள்ளது. இந்த தடுப்பணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் இருகரை களை தொட்டும் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றின் மணல் திட்டு நடு பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வள வனூர் போலீ சாருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முருகன், நெல்லிக்குப்பம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாராவது அடித்து கொன்று உடலை வீசி விட்டு சென்றார்களா? அந்த பகுதியில் யாராவது காணாமல் போனார்களா? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News