உள்ளூர் செய்திகள்

புவனகிரி அருகே குடும்பத் தகராறில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

Published On 2023-04-07 12:40 IST   |   Update On 2023-04-07 12:40:00 IST
  • சிவக்குமாருக்கும் கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லை.
  • சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கடலூர்:

புவனகிரி அடுத்த வடக்கு திட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவருக்கும் இவரது மனைவி ரம்யா கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறிப்படுகிறது.

இந்த நிலையில் சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் வீட்டில் இருந்த மண்ணெண்ணை யை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Tags:    

Similar News