பண்ருட்டி அருகே வயிற்று வலியால் ஆசிரியை கணவர் தூக்குபோட்டு சாவு
- சதீஸ்குமார் மது குடித்து விட்டு தனது வீட்டிற்கு வந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் சேர்ந்தனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மணிமேகலை பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவர்கள் வேலை நிமித்தமாக பண்ருட்டி அருகே படைவீட்டு அம்மன் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதனையடுத்து சதீஸ்குமாருக்கு சமீபகாலமாக தீரத வயிறு வலி இருந்து வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஸ்குமார் மது குடித்து விட்டு தனது வீட்டிற்று வந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஸ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.