உள்ளூர் செய்திகள்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனைவி- கைக்குழந்தையுடன் வந்து மனு கொடுத்த 'டீ' வியாபாரி
- 12 ஆண்டுகளாக நெல்லை- செங்கோட்டை ரெயிலில் டீ விற்று வருவதாக குருநாதன் மனுவில் கூறியுள்ளார்.
- அம்பை ரெயில் நிலையத்தில் கேன்டீன் நடத்தி வரும் ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை டவுன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவர் இன்று தனது மனைவி, மகள் மற்றும் கைக்குழந்தையுடன் வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 12 ஆண்டுகளாக நெல்லை- செங்கோட்டை செல்லும் ரெயிலில் கேன் மூலம் குறைந்த விலையில் டீ விற்று வருகிறேன். இதனை நம்பியே எனது குடுத்பத்தின் வாழ்வாதாரம் உள்ளது. இந்நிலையில் அம்பை ரெயில் நிலையத்தில் கேன்டீன் நடத்தி வரும் ஒருவர் என்னை குறைந்த விலையில் டீ விற்க கூடாது எனவும், இதனால் அவருக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனது வாழ்வாதரம் கருதி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.