உள்ளூர் செய்திகள்

வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளி தற்கொலை

Published On 2023-09-27 13:38 IST   |   Update On 2023-09-27 13:38:00 IST
  • ராகவன் கடந்த 21-ந் தேதி தனது மனைவியிடம் தற்கொலை செய்யப்போகிறேன் என கூறி விட்டு வெளியே சென்றார்.
  • ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் பெரியார் நகரை சேர்ந்தவர் ராகவன் (வயது 61). தேயிலை தோட்ட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

ராகவன் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் தற்கொலை செய்ய போகிறேன் என கூறி விட்டு வெளியே செல்வார். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார்.

இதே போல ராகவன் கடந்த 21-ந் தேதி தனது மனைவியிடம் தற்கொலை செய்யப்போகிறேன் என கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் உருளிக்கல் சுடுகாட்டு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்ற கணவர் 2 நாட்களை கடந்தும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் ராகவனை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் தொழிலாளியின் மகன் மாயமான தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராகவனை தேடி வந்தனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றவர்கள் ஆண் ஒருவர் அழுகிய நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடப்பதை பார்த்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து ஷேக்கல்முடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது தேயிலை தோட்ட தொழிலாளி ராகவன் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News