உள்ளூர் செய்திகள்
திருத்தணியில் கோவில் அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர் திடீர் போராட்டம்
- திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு கார், பாஸ் கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக வழங்கவில்லை
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு கார் பாஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு கார், பாஸ் கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக வழங்கவில்லை என்று கூறி பா.ம.க, பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் இந்து மக்கள் முன்னணி அமைப்பினர் ஏராளமானோர் திருத்தணி முருகன் கோவில் துணை ஆணையர் அலுவலகம் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.