கோவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவலாளி விபத்தில் சிக்கி பலி
- லாரி மோதியதில் வாலிபர் உடல் நசுங்கி சாவு
- விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை இருகூர் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்த வர் பழனிசாமி (வயது 43). காவலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நீலாம்பூர் - சூலூர் பிரிவு ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பழனி சாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயி ருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே காவலாளி பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர் அருகே உள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (57). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய சுப்பிரமணி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு லாரி சுப்பிரமணி மீது ஏறி இறங்கியது. அதில் தலை மற்றும் உடலில் படுகாயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.