உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் பங்க் கடைக்காரரைஏமாற்றிய டிப்டாப் ஆசாமி,

Published On 2023-01-20 13:58 IST   |   Update On 2023-01-20 13:58:00 IST
  • கதிர்வேல் கடைக்கு தினமும் ஒரு டிப் டாப் ஆசாமி வருவார். அவர் திண்டிவனத்தில் தண்டல் பைனான்ஸ் விடுவதாக தன்னை கதிர்வேலிடம் அறிமுகமானார்,
  • இவர் தனது 2.5 கிராம் மோதிரத்தை கழட்டி டிப் டாப் ஆசாமியிடம் தருகிறார். இதனை வாங்கிச் சென்றவர் திரும்ப வரவில்லை.

விழுப்புரம் :

திண்டிவனம் கற்பக விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 70). இவர் திண்டிவனம் பஸ் நிலையத்தில் பங்க்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடைக்கு தினமும் ஒரு டிப் டாப் ஆசாமி வருவார். அவர் திண்டிவனத்தில் தண்டல் வைனான்ஸ் விடுவதாக தன்னை கதிர்வேலிடம் அறிமுகமாகிறார். இதைத் தொடர்ந்து நேற்று கதிர்வேலின் பங்க் கடைக்கு வந்த டிப் டாப் ஆசாமி ஒருவருக்கு பைனான்ஸ் கொடுக்க ரூ.10 ஆயிரம் குறைகிறது.

இருந்தால் கொடுங்கள் வீட்டிற்கு சென்று எடுத்து வருவதாக கேட்கிறார். பணம் இல்லை என்று கதிர்வேல் கூறுகிறார். எதாவது தங்க ஆபரணங்கள் இருந்தால் ெகாடுங்கள் அடகு வைத்து உடனே திருப்பி தருகிறான் என்று கூறுகிறார். இதனை நம்பி கதிர்வேல் தனது 2.5 கிராம் மோதிரத்தை கழட்டி டிப் டாப் ஆசாமியிடம் தருகிறார். இதனை வாங்கிச் சென்றவர் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கதிர்வேல் இது தொடர்பாக திண்டினம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News