உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
- ராமலிங்கம் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் பெட்ரோல் நிலையத்துக்கு வரவில்லை.
- பிரேத பரிசோதனைக்காக ண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த ஒடப்பன் குப்பத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 31). திருமணம் ஆகாதவர். இவர்வீரசிங்கன் குப்பத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்ஒன்றில்வேலை செய்து வந்தார். நேற்று பிற்பகல் 12 மணி அளவில் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் பெட்ரோல் நிலையத்துக்கு வரவில்லை.
இதற்கிடையில் வீட்டு தோட்டத்தில் உள்ள முந்திரி மரத்தில் ராமலிங்கம் தூக்கில் பிணமாக தொங்கியதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.