உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் அருகே தாழ்வாக பறந்த போர் விமானத்தால் பரபரப்பு

Published On 2022-07-05 12:52 IST   |   Update On 2022-07-05 12:52:00 IST
  • திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி விமானங்கள் தாழ்வாக பறப்பது வாடிக்கையாக உள்ளது.
  • விமானம் தங்கள் ஊரில் வட்டமடித்து செல்வதை கிராமமக்கள் ஆச்சம் கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி விமானங்கள் தாழ்வாக பறப்பது வாடிக்கையாக உள்ளது. அதிலும் போர் விமானங்கள் போன்றவை நகரில் செல்லும்போது பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

அதேபோல வடமதுரை, கொம்பேறிபட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலையில் தாழ்வாக பறந்த போர்விமானம் கிராமமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

அது உண்மையிலேயே போர் விமானமா என தெரியாத நிலையில் வான்வெளியில் இருந்தபடியே சாகசம் செய்தபடி சுற்றிச்சுற்றி வந்தது. இதனால் அதுபோர் விமானமாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் மக்களை பார்த்து கையசைத்ததும், உற்சாக குரல் எழுப்பியதும் அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பல்வேறு ஊர்களில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து ஏற்படும் சூழலில் இதுபோன்ற விமானம் தங்கள் ஊரில் வட்டமடித்து செல்வதை கிராமமக்கள் ஆச்சம் கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News