உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே தேக்கு மரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
- வன அலுவலர்கள், ஊழியர்கள் ரோந்து சென்றபோது ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
- உரிய அனுமதியுடன் தேக்கு மரங்களைகொண்டு செல்வது விசாரணையில் தெரிய வந்தது.
நெல்லை:
களக்காடு- முண்டந் துறை புலிகள் காப்பகம், அம்பை வனக்கோட்டத்திற் குட்பட்ட பகுதிகளில் வன அலுவலர்கள்- ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் தேக்கு மர தடிகள் இருந்தன.
இது தொடர்பாக விசாரித்த போது அவை கட்டளை மலை எஸ்டேட் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் காற்றில் விழுந்த பட்டு போன தேக்கு மரங்களை அப்புறப்படுத்த உரிய அனுமதி பெற்று கொண்டு செல்வது தெரிய வந்தது. எனினும் அந்த தடி மரங்களில் சொத்து குறியீடு இல்லாத காரணத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.