உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை
- ஒரு சிறுத்தை ஊட்டி ரோட்டை கடந்து செல்லும் காட்சி, பொமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், சுமார் 60 சதவீதம் வனப்பகுதிகளை உள்ளடக்கியது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட எச்.பி.எப், கலெக்டர் குடியிருப்பு, ரோஸ்மவுண்ட், எல்க்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. அவை இந்திரா நகர், பெரிய பிக்கட்டி ஆகிய பகுதிகளில் அடிக்கடி உலா வந்து செல்கின்றன. இந்த நிலையில் ஒரு சிறுத்தை ஊட்டி ரோட்டை கடந்து செல்லும் காட்சி, பொமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்கா ணித்து, அதனை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.