உள்ளூர் செய்திகள்

குன்னூா் அருகே எடக்காடு-கன்னேரி சாலையில் சுற்றிதிரிந்த சிறுத்தை

Published On 2022-11-30 09:27 GMT   |   Update On 2022-11-30 09:27 GMT
  • தேயிலை எஸ்டேட்டுக்குள் சென்று அமா்ந்து கொண்டது.
  • தேயிலை எஸ்டேட் தொழிலாளா்களைய அச்சமடையச் செய்துள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள எடக்காடு கன்னேரி பகுதி சோலைகள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இங்கு காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

இந்த வனவிலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி உணவு, தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதை காணமுடிகிறது.சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்தி செல்கின்றன.

இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள சாலையில் நேற்று மாலை சிறுத்தை ஒன்று நடமாடியது.

சிறிது நேரம் அங்கேயே சிறுத்தை நடமாடி கொண்டிருந்தது. பின்னர் சிறுத்தை அங்குள்ள தேயிலை எஸ்டேட்டுக்குள் சென்று அமா்ந்து கொண்டது.

சிறுத்தை சாலையில் நடமாடியதை அந்த வழியாக ஜீப்பில் சென்றவா்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனா். பகல் நேரத்தில் சிறுத்தை நடமாடியது இப்பகுதி மக்களையும் தேயிலை எஸ்டேட் தொழிலாளா்களையும் அச்சமடையச் செய்துள்ளது.

Tags:    

Similar News