உள்ளூர் செய்திகள்

வாங்கிய கடனுக்காக சொத்துக்களை எழுதி வாங்கிய கணவன்-மனைவி: போலீசில் புகார்

Published On 2022-12-11 12:44 IST   |   Update On 2022-12-11 12:44:00 IST
  • வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
  • கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கடலூர்: 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சீமாட்டி (33), இவர் திட்டக்குடி தாலுகா அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். வாங்கிய கடனை செல்வக்குமார் பலமுறை திருப்பி கேட்டுள்ளார். அதில் ஒரு சில நேரங்களில் அசிங்கமாக திட்டியும் கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கடந்த 9- ந் தேதி சீமாட்டியை அசிங்கமாக திட்டி வேப்பூர் பத்திரபதிவு அலுவலகத்திற்கு வர வழைத்து செல்வக்குமாரும் அவரது மனைவி விஷ்ணு பிரியாவும் சீமாட்டியை மிரட்டி கையால் அடித்து அவரது சொத்தை எழுதி வாங்கிவிட்டதாக வேப்பூர் போலீஸ் நிலையத்தில் சீமாட்டி புகார் அளித்தார். அதன் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News