கூரை வீட்டில் ஏற்பட்ட நெருப்பினை தீயணைப்பு படை வீரர்கள் அணைத்த காட்சி.
திட்டக்குடி அருகே தீ விபத்தில் வீடு எரிந்து நாசம்
- வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இவரதுகூரை வீடு தீடீரென தீ பிடித்து எரிந்தது.
- உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின.
கடலூர்:
திட்டக்குடி அருகே எழுமாத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. கூலித்தொழிலாளி.இவர் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இவரதுகூரை வீடு தீடீரென தீ பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் திட்டக்குடி தீயணைப்பு துறை நிலை அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தீயை ஊர் பொதுமக்கள் அணைத்துக் கொண்டிரு ந்தபோது தீயணைப்பு வீரர்கள் மேலும் அருகில் உள்ள கூரை வீடுகளில் தீ பரவாமல் இருக்க முழுவதும் அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்து உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆவினங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.