உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
- பூமாண்டம்பாளையம் பகுதியில் கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
- இவர் வளர்த்த நாய் அருகில் இருந்த 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் பூமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). இவர் வளர்த்த நாய் அருகில் இருந்த 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து கந்தசாமி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று நாயை கயிற்றால் கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.