உள்ளூர் செய்திகள்

சிறுத்தை தாக்கி பசுமாடு பலி

Published On 2022-11-17 15:20 IST   |   Update On 2022-11-17 15:20:00 IST
  • உடற்கூறு ஆய்வு செய்து கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர்
  • விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடவள்ளி,

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே நல்லூர்வயல் பகுதியில் கடந்த சில தினங்களாக இங்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்று வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பெருமாள்கோவில்பதி பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான பசு மாடுகள் தோட்டத்தின் அருகே மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது மேய்சலுக்கு சென்ற பசு மாடுகளில் ஒரு மாடு மட்டும் வீடு திரும்பாத நிலையில் அப்பகுதியில் சென்று பார்த்த போது பசு மாடு உடல் முழுவதும் காயத்துடன் இறந்து கிடந்தது. இதையடுத்து சண்முக சுந்தரம் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தியின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும் உயிரிழந்த பசு மாட்டிற்கு உடற்கூறு ஆய்வு செய்து கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். இதனிடையே தொடர்ந்து கடந்த 3 மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்றதாகவும், உடனடியாக சிறுத்தை வருவதை தடுக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News