உள்ளூர் செய்திகள்

ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு

Published On 2023-05-01 13:58 IST   |   Update On 2023-05-01 13:58:00 IST
  • ராகவன் வரும் பசு ஒரே சமயத்தில் 2 ஆண் கன்றுகளை ஈன்றது.
  • அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பிள்ளைகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன். விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் ராகவன் வரும் பசு ஒரே சமயத்தில் 2 ஆண் கன்றுகளை ஈன்றது. தற்போது பசு ஈன்றுள்ள 2 ஆண் கன்றுகளும் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Tags:    

Similar News