உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி துணிக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டியவர்கள் மீது வழக்கு
- விஜய நிர்மலா பண்ருட்டி- கடலூர் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
- வழக்கு பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
புதுச்சேரி கிருஷ்ணா நகர் 11-வது கிராஸ் ரோஜா தெரு வை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி விஜய நிர்மலா (வயது43), இவர், பண்ருட்டி- கடலூர் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இங்கு பண்ருட்டி சாமியார் தர்காவை சேர்ந்த சம்சுதீன் தன்னுடன் ஒருவரை அழைத்து கொண்டு கடைக்கு சென்று குடிப்பதற்கு பணம் கேட்டு ஆபாசமாக திட்டி மிரட்டி மாமுல் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்துகடையின் உரிமையாளர் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார்.பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் கண்ணன் சம்சுதீன் மற்றும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.