உள்ளூர் செய்திகள்

காரைக்கால் கோட்டுச்சேரி மளிகை கடையில் போதை பொருட்கள் வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்கு

Published On 2023-03-06 15:14 IST   |   Update On 2023-03-06 15:14:00 IST
  • கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாகதகவல் வந்தது.
  • , ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், கோட்டுச்சேரி போலீசார், குறிப்பிட்ட மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது, ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் அல்லிராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News