உள்ளூர் செய்திகள்

காரைக்கால் அம்பகரத்தூரில் டாக்டரை தாக்கிய 31 பேர் மீது வழக்கு

Published On 2023-04-07 12:47 IST   |   Update On 2023-04-07 12:47:00 IST
  • 2 பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
  • டாக்டரை சரமாரியாக தாக்கி, கிளினிக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த அம்பகரத்துாரில் டாக்டர் ஞானமணி (வயது 35) மற்றும் தனியார் லேப் உரிமையாளர் பஷீர் (36) ஆகியோர் இணைந்து கிளினிக் வைத்து நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2 பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதில் டாக்டர் ஞானமணி அம்பகரத்துார் பகுதியிலேயே தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இதனால் இவர்களுக்கு இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பஷீர் உள்ளிட்ட 31 பேர் ஞானமணி கிளினிக்கில் புகுந்து டாக்டரை சரமாரியாக தாக்கி, கிளினிக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த டாக்டர் ஞானமணி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அம்பகரத்துார் போலீசார் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News