உள்ளூர் செய்திகள்
வேப்பூரில் கார் தீப்பிடித்து எரிந்தது
- காரில் சென்னையில் இருந்து திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தனர்.
- கார் என்ஜின் பகுதியில் இருந்து லேசாக புகை வந்துள்ளது .
கடலூர்:
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ரோகினி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது55) இவர் தனது மனைவி சியாமளா, மகள் சாவித்திரி, மகன் ராகுல் கிருஷ்ணன் ஆகியோருடன் காரில் சென்னையில் இருந்து திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தனர். காரை டிரைவர் ரமேஷ் ஓட்டி வந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் வெளியே டீ குடிப்பதற்காக காரை நிறுத்திய போது கார் என்ஜின் பகுதியில் இருந்து லேசாக புகை வந்துள்ளது . உடனே காரில் இருந்து அனைவரும் இறங்கிவிட்டனர். கார் என்ஜினில் வெப்பம் அதிகமானதால் கார் தானே தீ பிடித்து மளமளவென்று எரிந்துள்ளது.இது குறித்து தகவலறிந்த வேப்பூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.