உள்ளூர் செய்திகள்

நெய்வேலி அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

Update: 2022-08-10 07:45 GMT
  • நெய்வேலி அருகே நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
  • கீழூர் சாலையில் வந்த போது, காரில் இருந்து திடீரென புகை வந்தது.

கடலுார்:

கடலுார் மாவட்டம், நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியை சேர்ந்தவர் குருசாமி, (வயது58) அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர், தனது மகன் எழிலுடன் மயிலாடுதுறையில் இருந்து மாருதிகாரில் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.காரை குருசாமி ஒட்டினார். நெய்வேலி அருகே கீழூர் சாலையில் வந்த போது, காரில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காரை நிறுத்திவிட்டு, குருசாமி, எழில் ஆகியோர் கீழே இறங்கி ஓடியதால் காயமின்றி தப்பினர். தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையஅலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர் கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுதும் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News