உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் சிறுத்தை தாக்கி காட்டெருமை சாவு

Published On 2023-10-06 13:54 IST   |   Update On 2023-10-06 13:54:00 IST
  • யானைகள் தடுப்பு அகழி பகுதியில் பிணமாக மீட்பு
  • காட்டெருமையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் வனச்சரகம் ஓடந்துறை காப்புக்காடு ஜக்கனரி டெப்போ பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. உடனடியாக வனத்துறையினர் துர்நாற்றம் வந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள யானை தடுப்பு அகழி பகுதியில் ஆண் காட்டெருமை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். தொடர்ந்து கோவை வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் பிரபு ஆகியோர் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சிறுத்தை தாக்கியதில் காட்டெருமை இறந்தது தெரியவந்தது.

Tags:    

Similar News