உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றிய கரடி
- கரடி சுற்றித்திரிந்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
- கரடி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பெரியாா் நகா் குடியிருப்பு பகுதியில் ஒற்றை கரடி அதிகாலை சுற்றித்திரிந்தது. இந்த காட்சி அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இப்பகுதியில் சுற்றித்திரியும் கரடியை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்