உள்ளூர் செய்திகள்
குன்னூா் அருகே பள்ளி சமையலறைக்குள் புகுந்த கரடி
- தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
- கரடியை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்நிலையில் குன்னூா் அருகே உலிக்கல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறைக்குள் புகுந்த கரடி அங்கிருந்த எண்ணை, அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை உட்கொண்டு சென்றது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த கரடியை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் இல்லையெனில் கூண்டுவைத்துப் பிடிக்கவும் வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.