உள்ளூர் செய்திகள்
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 50 வயது தொழிலாளி
- நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டி பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவர் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாதாரம் செய்ததாக கூறப்படுகிறது.
- அதன் பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரங்கனை கைது செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டி பட்டியை சேர்ந்தவர் ரங்கன் (வயது 50), கூலி தொழிலாளி.
இவர் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாதாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரங்கனை கைது செய்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு ரங்கன் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.