உள்ளூர் செய்திகள்

அமைச்சர் கீதாஜீவன், மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக 3 சக்கர சைக்கிள் வழங்கிய காட்சி.

தூத்துக்குடியில் மனு கொடுத்த 1 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் - அமைச்சர் கீதாஜீவனுக்கு, பயனாளி நன்றி

Published On 2023-04-06 14:37 IST   |   Update On 2023-04-06 14:37:00 IST
  • தூத்துக்குடி ராஜமன்னார் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பால சுப்பிரமணியன் என்பவர் தனக்கு 3 சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார்
  • ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர சைக்கிள் அவருக்கு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், அமைச்சருமான கீதாஜீவனிடம் கேட்டு வருகிறார்.

அந்த வகையில் தூத்துக்குடி ராஜமன்னார் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பால சுப்பிரமணியன் என்பவர் தனக்கு 3 சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். மனு வழங்கிய அவரை, அங்கேயே அமர வைத்து ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனா ளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர சைக்கிள் வழங்கப் பட்டது.

நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச் செயலாளரும் கவுன்சிலரு மான கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் ஜெயசீலி, வட்டச் செயலாளர்கள் சுப்பையா, டென்சிங், செந்தில்குமார், முன்னாள் வட்டச் செயலாளர் மாரியப்பன் மற்றும் அற்புதராஜ், மணி, அல்பட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது குறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில், கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் அயராது பணியாற்றுவதில் அவருக்கு நிகர் அவர் தான் என்பதை இந்தியா முழுவதும் நிரூபித்து வருகிறார். அதே வழியில் அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குறைகேட்பு மனு பெற்றுக்கொள்வதாக தகவல் கிடைத்தது.

அவரிடம் கோரிக்கை வைத்தால் நிறைவேற்றி தருவார்கள் என்று பலரும் கூறியதன்பேரில் மனு அளித்தேன். என்னை இங்கே அமரவைத்து 1 மணிநேரத்தில் சைக்கிள் வழங்கியதை என் வாழ் நாளில் மறக்க மாட்டேன். முதல்-அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவ ரங்களையும் கண்டறிந்து பேசியபோது பெண்சிங்கம் என்று கீதாஜீவனுக்கு பட்டம் சூட்டினார். அதன்பின்னர் தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து கலைஞர் அரங்கம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை திறப்பின் போது அதே வார்த்தையை 2-வது முறையாக கூறினார்.

சென்னையில் சமூக நலத்துறையின் மூலம் நடைபெற்ற விழாவில் 3-வது முறையாக பெண்சிங்கம் என்ற வார்த்தையை முதல்-அமைச்சர் கூறினார். அதற்கேற்றாற் போல் இந்த வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பணிகள் இது போல் பல நடைபெற்றுள்ளன. என்னை போன்ற ஏழை- எளியவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Tags:    

Similar News