உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கிய ரெயிலில் சென்னை வர 867 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்- ரெயில்வே கோட்ட மேலாளர்
- விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் 867 பயணிகள் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர்.
- சென்ட்ரல் விசாரணை மையத்திற்கு ஆயிரத்திற்கும் மேலான போன்கள் வந்துள்ளன.
சென்னை:
ஒடிசா ரெயில் விபத்து குறித்து சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் 867 பயணிகள் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் குறித்து கேட்ட றிந்து வருகிறோம். சென்ட்ரல் விசாரணை மையத்திற்கு ஆயிரத்திற்கும் மேலான போன்கள் வந்துள்ளன. உறவினர்களுக்கு உரிய தகவல், விவரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.