உள்ளூர் செய்திகள்

கோவையில் கொரோனா பரிசோதனை 800 ஆகஅதிகரிக்கப்பு

Published On 2023-03-21 09:52 GMT   |   Update On 2023-03-21 09:52 GMT
  • தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்
  • கொரோனா பாதிப்பு காரணமாக 112 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை,

நாட்டில் 2-வது அலையாக கொரோனா தொற்று பரவிய போது கோவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமானோர் சிகிச்சை பலன் அளிக்காமல் கொரோனாவுக்கு பலியானார்கள்.

அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த மாதத்தில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தற்போது தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 837 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்ற 9 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 112 பேர் சிகிச்சை பெற்று வருகி றார்கள்.

தமிழக அளவில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு கோவை முதலிடத்தில் தொடர்ந்து இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை யின் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படு த்தப்பட்டுள்ளன. மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 800-ஐ கடந்து உள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் அருணா கூறியதாவது:-

கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரி சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அவருடன் தொடர் பில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என அனை வரும் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றால் கொரோனா பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News