உள்ளூர் செய்திகள்

மாவட்டத்தில் ஒரே நாளில் 74.80 மி.மீ. மழை கொட்டியது

Published On 2023-06-19 15:35 IST   |   Update On 2023-06-19 15:35:00 IST
  • அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது
  • வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தன.

இந்த நிலையில் நேற்று தஞ்சை , பாபநாசம், பேராவூரணி, திருவிடைமருதூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விட்டு விட்டு சாரல் மழை பொழிந்தது. இதனால் நேற்று வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்தது.

மாவட்டத்தில் ஒரே நாளில் 74.80 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளன.

தென்மேற்கு வங்கக்கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையுமென்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி தஞ்சையில் இன்று வெப்பத்தின் தாக்கம் குறைந்தே காணப்பட்டன.

தொடர்ந்து அடுத்த வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறையுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-

பாபநாசம் -7, பேராவூரணி -6.40, திருவிடைமருதூர் -6.20, மஞ்சளாறு -5.80, தஞ்சாவூர் -5, பட்டுக்கோட்டை -5, கும்பகோணம் -4.40, அய்யம்பேட்டை - 4, மதுக்கூர்-3.

Tags:    

Similar News