உள்ளூர் செய்திகள்
ரூ.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குளிர்பதன கிடங்கு
- முறையாக ஒதுக்கீடு செய்யாமல் அதிகாரிகள் மெத்தன செயல்பாட்டால் அப்பகுதி புதர் மண்டியும், உபகரணங்கள் துரு பிடித்தும் பயன்பாடின்றி காணப்படுகிறது.
- மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக விவசாயிகள் பயன்பாட்டிற்க்கு அனுமதி அளிக்க வேண்டும்
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தக்காளி, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட இதர அழுகும் தன்மையுள்ள உணவு பொருட்களை பதப்படுத்த வேளாண்மை விற்பனை ஒழுங்கு மையத்தின் சார்பில் முதன்மை பதப்படுத்தும் நிலையம், வே- பிரிட்ஜ், 12 கடைகள், குளிர்பதன கிடங்கு, விற்பனைக்கூடம் உள்ளிட்டவை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு காய்கறி விற்பனை கடைகள், குளிர்பதன கிடங்கு உள்ளிட்டவைகளை முறையாக ஒதுக்கீடு செய்யாமல் அதிகாரிகள் மெத்தன செயல்பாட்டால் அப்பகுதி புதர் மண்டியும், உபகரணங்கள் துரு பிடித்தும் பயன்பாடின்றி காணப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக விவசாயிகள் பயன்பாட்டிற்க்கு அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.