கோவையில் இரும்பு கம்பிகளை திருடிய 5 பெண்கள் உள்பட 6 பேர் கைது
- போலீசார் ஒத்தகால்மண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
- விசாரணையில் ஒத்தகால்மண்டபத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 160 கிலோ இரும்பு கம்பிகளை திருடி வந்தது தெரியவந்தது.
கோவை,
கோவை செட்டிப்பாளையம் போலீசார் ஒத்தகால்மண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது 5 பெண்கள் உள்பட 6 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லோடு ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது இந்த கும்பல் ஒத்தகால்மண்டபத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 160 கிலோ இரும்பு கம்பிகளை திருடி வந்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார் 6 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்து போலீசார் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்வாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றும் சதீஸ்குமார் என்பவர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் பழவாஞ்சிபாளையத்தை சேர்ந்த டிரைவர் முத்துகுமார் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த தேவி (29), சந்தியா (25), பிரியா (24), ஜோதி (25) என்பது தெரியவந்தது.
பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 5 பெண்கள் உள்பட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.