உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே சூதாடிய 6 பேர் கைது
- சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மத்தூர் ,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் சரகத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஜி.டி.குப்பம் சாமுண்டீஸ்வரி கோவில் அருகே ஆற்றங்கரை பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 பேர் பிடிபட்டனர்.
முருகன் (வயது 31), சக்திவேல் (36), குமரேசன் (24), மணிகண்டன் (30), சந்தோஷ்குமார் (23), முருகன் (42) ஆகிய அவர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆறு இருசக்கர வாகனங்களை மத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.