உள்ளூர் செய்திகள்

ஆய்வுக்கு வந்த வாகனங்கள் மற்றும் அதன் டிரைவர்கள்.

பள்ளி வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தினால் 6 மாதம் சிறை

Published On 2023-05-20 14:41 IST   |   Update On 2023-05-20 14:41:00 IST
  • சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பேருந்துகள் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆய்வு செய்யும் பணி நடந்தது.
  • மாவட்டத்தில் 108 வாகனங்களில் 84 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

சேலம்:

சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பேருந்துகள் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆய்வு செய்யும் பணி நடந்தது.

தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு )ராஜராஜன் தலைமையில் சேலம் வருவாய் அலுவலர் மாறன், தெற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் ஆய்வாளர்கள் வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் 84 பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜராஜன் கூறியதாவது:-மாவட்டத்தில் 108 வாகனங்களில் 84 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் குறைபாடுகள் இருப்பின் அதை திருப்பி அனுப்பி சரி செய்து வரும்படி அறிவுறுத்தபடும்.

பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் மிகுந்த கவனமுடன் பேருந்துகளை இயக்க வேண்டும். குழந்தைகளை பேருந்தில் ஏற்றும் போது அவர்கள் முழுமையாக ஏறி இருக்கையில் அமர்ந்து விட்டனரா என்பதை கவனித்தும், அதேபோல் பேருந்தில் இருந்து குழந்தைகள் இறங்கிய பிறகு பெற்றோரிடம் சேர்ந்து விட்டனரா என்பதை உறுதி செய்த பின்னர் பேருந்தை இயக்க வேண்டும்.

பேருந்தில் தீயணைக்கும் கருவி, முதலுதவி பெட்டி கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும். பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் விபத்து ஏற்படுத்தினால் 6 மாத காலத்திற்கு அவர்களது லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News