உள்ளூர் செய்திகள்

கோவையில் அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்திய 54 வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-03-30 09:10 GMT   |   Update On 2023-03-30 09:10 GMT
  • பிப்ரவரி 24-ந் தேதி முதல் தற்போது வரை 1,254 வாகனங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்டன.
  • 94 வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவையில் அனுமதி யில்லாமல் கனிமவளங்கள் கடத்தி சென்ற 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவையில் இருந்து கேரளத்துக்கு அனுமதியில்லாமல் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வரப்பெற்றன. இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள எல்லை சோதனைச் சாவடிகளில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய குழு தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அனுமதி வழங்கப்பட்ட கனிம இருப்பு கிடங்குகளிலிருந்து கேரளத்துக்கு எடுத்துசெல்ல புவியியல் மற்றும் சுரங்கத் துறை மூலம் சீனியரேஜ் தொகை, கனிம அறக்கட்டளை நிதி மற்றும் பசுமை வரி ஆகியவற்றை செலுத்திய பின் 4 யூனிட், 6 யூனிட் அளவுகளில் எடுத்து செல்ல போக்குவரத்து நடைச்சீட்டு கள் வழங்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நடைச்சீட்டில் நாள், நேரம் போன்ற விவரங்கள் விடுபட்டிருந்தலோ, பிழை திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக கனிமங்கள் ஏற்றிச்செல்லப்பட்டாலோ கனிம வளத்துறை வருவாய்த்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி முதல் தற்போது வரை 1,254 வாகனங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்டன. மேலும், கடந்த ஜூலை 2022 முதல் மார்ச் 2023 வரை உரிய அனுமதியில்லாமல் கனிமவ ளங்களை கடத்தி சென்ற 54 வாகனங்கள் கனிமவளம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக கனிம வளங்க ளை ஏற்றிச் சென்ற 94 வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகளை கண்டறியும் வகையில் 15-க்கும் மேற்பட்ட குவாரிகளில் ஆய்வுகள் நடைபெற்றன. இதில் 2 குவாரிகளில் விதிமீறல்கள் கண்ட றியப்பட்டு உரிய அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குவாரி குத்தகை வழங்கப்படும் நேர்வுகளில் அனுமதி கோரும் புலத்தினை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு எல்லைத் தூண்கள் நடுவதற்கு அனைத்து குத்தகை தாரர்களுக்கும் அறிவு றுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News